Velammal’s Praggnanandha makes India Proud
Grandmaster R. Praggnanandha, Class 11 of Velammal Main School, Mogappair Campus wins the Julius Bear Challengers Chess Tournament held virtually with a dominating score of 3-0 defeating the American opponent Christopher Yoo and secured the First Prize $12500 on 17th October,2021.
Making a clean sweep by scoring 8 wins and giving away just one draw in the knockout stage qualifies Grandmaster Praggnanandha to participate in the forthcoming Meltwater Champions Chess Tour scheduled next year where he will face the strongest players in the world.
The School Management congratulates the champion on his remarkable feat and wishes him success ahead.
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார்.
இப்போட்டியின் 8 சுற்றுகளிலும் வெற்றிகளைப் பெற்று நாக் அவுட் கட்டத்தில் ஒரு டிராவை வழங்கி சிறப்பாக விளையாடியதன் மூலம் தன் அபார விளையாட்டுத் திறனை மீண்டும் நிலைநிறுத்தி யுள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறப்பான இந்த வெற்றியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் சதுரங்க சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் தகுதியினைப் பெற்றுள்ளார்.
அங்கு அவர் உலகின் மிக வலிமையான வீரர்களை எதிர்கொள்ள இருக்கிறார்.
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அற்புதமான ஆட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற சதுரங்க வீரர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.
வேலம்மாள் பள்ளி நிர்வாகம் சாம்பியன் ஆர்.பிரக்ஞானந்தாவின் வியக்கத்தக்க இச்சாதனையைப் பாராட்டுகிறது மற்றும் அவர் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறது.