வேலம்மாள் ஐ.ஐ.டி மற்றும் நீட் அகாடமி இணைந்து நடத்தும் மெய்நிகர் விஞ்ஞான அறிவியல் கண்காட்சி- 2020-21 .

வேலம்மாள் ஐ.ஐ.டி மற்றும் நீட் அகாடமி  அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள மெய்நிகர் சூழலில்  கல்வித் திருவிழாவான SCIENZA 2020-21 ஐ நடத்த வேலம்மாள் நெக்ஸஸ்,குழுமம் முன்வந்துள்ளது.
 இது 5 ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும்,  வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கல்வி மாநாடு” என்ற மையக் கருப்பொருளினை அடிப்படையாகக் கொண்ட இம்மாநாட்டில் படைப்பாற்றல் மற்றும் புதுமையாக்கம் தொடர்பான மாணவர்களின் தாகத்தைத் தணிக்கவும் உதவுகிறது. மேலும்  அன்றாட வாழ்க்கையில் வேளாண்மை, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், கணிதம் இந்தியப் பொருளாதாரம் போன்ற துணைக் கருப்பொருள்களில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும்  வளர்ந்து வரும் மாணவர்களுக்கு விஞ்ஞான அணுகுமுறை மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிப்பதற்கான ஒரு களத்தையும் இந்த அறிவியல் விஞ்ஞான மாநாடாகிய
 ” SCIENZA 2020-21″ வழங்குகிறது.   பங்கேற்பாளர்கள் தங்கள் பதிவு வீடியோக்கள் மற்றும்  அறிவியல் தொடர்பான ஆதரவுப் பொருட்களையும் ஆன்லைன் பதிவு இணைப்பு வழியாக சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். தகுதியான பங்கேற்பாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் பதிவு 2021 ஜனவரி 26 முதல் 2021 பிப்ரவரி 10 வரை தொடங்குகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தயாராகுங்கள்! 
மேலும் விவரங்களுக்கு, 7305620501 ஐ தொடர்பு கொள்ளவும்.