Vel Tech Hosts Interactive Session with Actor Aarav for Students

Vel Tech Rangarajan Dr. Sagunthala R&D Institute of Science and Technology, Avadi, Chennai, on 3rd February 2025 organised an “Interactive session” with Actor Aarav for the students. With the blessings of Col. Prof. Vel Dr. R. Rangarajan (founder president & chancellor), Dr Sagunthala rangarajan (Foundress president) and Prof. Dr. Raj Gupta(Vice chancellor)
The event began with Tamil thaivazthu.
The chief guest for the event was Actor Aarav (Big Boss Title winner season 1), and was introduced by Prof. Dr. E Suresh Paul, The dean of school of media technology and communication. And the Dean of school of law Prof Dr. B. Venugopal and Dean of school of commerce Dr. A. jayabal felicitated the Chief guest.

The Event was organized by School of media technology and communication Dept. and this Interactive session included more than 2000 students with actor Aarav answering about his contemporary film career and his personal life, subsequently he propagated about his upcoming movie “vidamuyarchi with actor Ajith kumar, mentioning that “this film will be loved by the audience, and the movie will deliver an impactful social message for the audience.
Before concluding, Yogith from 2nd Viscom presented a portrait of Aarav. eventually, Dr. K. Ebiraj Ass.prof. From media dept. proposed thes vote of thanks and the event was concluded with national anthem.


வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம், 03.02.2025 அன்று நடத்திய நிகழ்ச்சியில்

பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் அவர்கள் விடாமுயற்சி திரைப்படம் குறித்த தன்னுடைய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். திறமை அறிவு எல்லாவற்றையும் விட விடாமுயற்சியே வெற்றி தரும் எனக் கூறி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேல் டெக் சட்டப் புல முதன்மையர் பேராசிரியர் வேணுகோபால் மற்றும் வணிகவியல் புல முதன்மையர் பேராசிரியர் ஜெயபால் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புல முதன்மையர் பேராசிரியர் சுரேஷ் பால் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வின் மையமாக நடிகர்கள் ஆரவும் அஜித்குமாரும் இணைந்திருக்கும் புகைப்படமும் ஊடகத்துறை மாணவர் யோகித் வரைந்த ஆரவின் ஓவியமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டன. வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கர்னல் டாக்டர். வேல் ஆர். ரங்கராஜன், திருமதி டாக்டர். சகுந்தலா ரங்கராஜன் இவர்களின் ஆசியோடும் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை பேராசிரியர் டாக்டர். ராஜு குப்தா அவர்களின் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர். எபிராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Share this:

Exit mobile version