விஷ்ணு மஞ்சுவுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக மட்டும் இன்றி தெலுங்கு திரையுலக நடிகர்களின் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (MAA) தலைவரான விஷ்ணு மஞ்சுவின் கலையுலக சேவையை கெளரவிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவருக்கு கோல்டன் விசா வழங்கி வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா என்பது பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கெளரவம் மிக்க மரியாதையாகும்.

திரைப்பட நடிகராக பல கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் நன்மதிப்பை பெற்றிருப்பதோடு, தயாரிப்பாளராகவும் பல நல்ல திரைப்படங்களை தயாரித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (MAA) தலைவராக தெலுங்கு திரையுலக ஒற்றுமைக்காக அறும்பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தி்ய திரையுலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவிய திரைப்படமாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை தயாரித்து, கண்ணப்பா வேடத்தில் நடித்து வரும் விஷ்ணு மஞ்சு, இதன் மூலம் இந்திய சினிமாவின் மகுடத்தில் மற்றொரு வைரத்தை பதிக்க உள்ளார்.

விஷ்ணு மஞ்சுவின் இத்தகைய சாதனைகளை கெளரவிக்கும் வகையில் மட்டும் இன்றி, இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் அவருக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு மஞ்சுவின் கலையுலக செல்வாக்கை கோடிட்டு காட்டும் வகையில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த கெளரவத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, பலர் அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்து வருகிறார்கள்.

Share this:

Exit mobile version