டிடிவி தினகரன்: இது தானா அந்த அதிரடி பிளான்?

பெரிய கட்சிகள் முதல் லெட்டர் பேட் கட்சிகள் வரை பாரளுமன்ற தேர்தல் ஜுரத்தில் இருக்கும் போது, எதற்கும் அசராத அசகாய சூரன் போல வலம் வர்றாரு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன்.

பெருசா எந்த கட்சிக் கூடவும் கூட்டனி வைக்காம எப்படி அவரால இவ்வளவு கூலா இருக்க முடியுதுன்னு அதிமுக சீனியர்களே மண்டையை பிச்சிக்கிறாங்களாம். ஆனால், டிடிவி தினகரனோ ஒரு பக்கா திட்டத்தோட தான் இருக்காராம்.

அவரோட பிளான் தன் கட்சியை ஜெயிக்க வைக்கறதை விட, அதிமுக வேட்பாளர்களை தோற்கடிப்பது தானாம். அதுக்காக அன்டர்கிரவுன்ட் வேலைகளை முடுக்கி விட்டுள்ள தினகரன், அவரோட திட்டம் கட்டாயம் சக்சஸ் ஆகும்னு நம்புராறாம்.

இதற்கிடையே நேற்று, இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட டிடிவி, நிருபர்களிடம் கூறியதாவது:-

“தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. அம்மாவின் பெரும்பாலான தொண்டர்களும் எங்கள் கட்சியில் தான் உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அதிமுக பெரிய வெற்றியை பெறப் போவதில்லை. ஆர் கே நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

அதேபோல பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் சின்னத்துக்கு முக்கியத்துவம் இருக்கப்போவதில்லை.”