குடிபோதை, கோபம், ஆவேசம்: என்ன தான் ஆச்சு டாப்சிக்கு?

தமிழ் ரசிகர்கள் மனதை ஆடுகளம் மூலம் வெள்ளாவி வெச்சு வெளுத்த டாப்சி, தற்போது சர்ச்சை மீது சர்ச்சை வந்து என்னை சேரும் என்னும் ரீதியில் வலம் வருகிறார். சமீபத்தில் அவர் குடிபோதையில் கலாட்டா செய்ததாக பாலிவுட் நடிகர் ஒருவர் கூறியிருந்த நிலையில், தற்போது தன்னை கேவலமாக பேசியவரை டாப்சி வறுத்தெடுத்துள்ளார்.

டாப்சியை சமூக வலைத்தளத்தில் சிலர் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். ஒருவர் உங்கள் உடல் மீது எனக்கு விருப்பம் என்று பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த டாப்சி எனக்கு மூளையில் ஒரு பகுதியை பிடிக்கும் என்றார்.

வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் இன்னொருவர் டாப்சி அணியும் ஆடைகளை பற்றி கேவலமாக பேசி வந்தார். டாப்சி கலந்து கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு சமூக விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி அந்த நபரை அழைத்து வந்தனர். டாப்சி நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று அவரிடம் சொல்லவில்லை.

நிகழ்ச்சி தொடங்கியதும் டாப்சி அரங்குக்குள் வந்தார். அவரை பார்த்ததும் அந்த நபர் அதிர்ச்சியானார். அவரை பார்த்து டாப்சி ஆவேசமாக பேசினார். நடிகைகள் என்றால் கேவலமாக நினைத்து விட்டீர்களா.

அவர்களை பற்றி சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் பதிவிடுவீர்களா? எங்களுக்கும் குடும்பம் வாழ்க்கை என்று இருப்பது தெரியாதா? என்றெல்லாம் கேட்டு அந்த நபரை கடுமையாக சாடினார். உடனே அவர் இனிமேல் உங்களை பற்றி கேவலமாக பேசமாட்டேன் என்று சொல்லி டாப்சியிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், டாப்சி குறித்து நடிகர் விக்கி கவுஷல் சமீபத்தில் அளித்த அளித்துள்ள பேட்டி ஒன்றில், “மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்தார்கள். படப்பிடிப்பின்போது நாங்கள் தங்கி இருந்த ஓட்டலிலே விருந்திற்கான ஏற்பாடும் நடைப்பெற்றது.

அப்போது நன்றாக குடித்த டாப்சி குடிபோதையில் தோட்டத்தில் படுத்து கொண்டு எழுந்து வர மாட்டேன் என்று மல்லுக்கட்டினார். நீங்கள் வராவிட்டால் நான் கிளம்பி விடுவேன் என்று கூறினேன். அப்படியாவது எழுந்து வருவார் என கூறினேன். ஆனால் அங்கேயே தூங்குவேன் என்று அடம் பிடித்தார்,” என்று கூறியிருக்கிறார்.