TNEB Grievance Day on 10.08.2023
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி
தாம்பரம் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 10.08.2023 (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில், செயற்பொறியாளர் / இயக்கம் & பராமரிப்பு /தாம்பரம், 110 கி.வோ, புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகம், 1வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை–45 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த குறைதீர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர், சென்னை மி.ப.வ/தெற்கு-2 அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.