ஆதரவற்றோர் மற்றும் மலை வாழ் மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன்

தீபாவளியை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் , சுற்றுலாதலமான ஏலகிரி மலையில் பொதுமக்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் , மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதால் , திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தலைமையிலான காவல்துறையினர் கண்காணித்து வந்தனர் . இந்நிலையில் இன்று தீபாவளி மாலை  நான்கு மணியளவில்  ஏலகிரி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரில்  சென்று அங்குள்ள முதியவர்கள் மற்றும்  குழந்தைகளுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகளை தந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர்  பாலகிருஷ்ணன் அவர்களின் திடீர் வருகையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அங்குள்ளவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் தீபாவளியினை பாதுகாப்பாக கொண்டாடும்படி அறிவுறுத்தினார். அதன்பின் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினார்.