அதெல்லாம் சகஜம் தானே, அஞ்சலி அடடே பதில்

அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என்று லைக்ஸை அள்ளிய அஞ்சலி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவார், காணாமல் போவார், ஆனால் மறுபடி எழுந்து வருவார். அப்படி ஒரு ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயா’ மோடில் மறுபடியும் தற்போது இருக்கும் அஞ்சலி, வாய்ப்புகளை வேட்டையாடி வருகிறார்.

ஜெய்யுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படும் நிலையில், அதை பற்றி கேட்டபோது கூலாக பதில் சொன்ன அஞ்சலி, “நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவைத்தான் நான் காதலிக்கிறேன். காதல் வந்தால் நானே ஓபனாக சொல்வேன் என்றார்.”

அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. “நடிகைகள் காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது எல்லாம் சகஜம் தான். என்னை பொறுத்த வரை திருமணம் செய்து கொண்ட பிறகும், நான் நடிப்பை தொடருவேன். எனது சினிமா பயணத்திற்கு திருமணம் ஒரு தடையாக இருக்காது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

கோடம்பாக்கம் பட்சிகளோ, “ஜெய்யை அவர் காதலிப்பது உண்மை தான். காதலை ஒத்துக்கொண்டால் வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் இப்படி பேசுகிறார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதை பற்றி விரைவில் முடிவெடுப்பார்கள்” என்கின்றன.

அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக நாடோடிகள் 2, லிசா, சிந்துபாத் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்போதைக்கு திருமணம் இருக்காது என்றும் அந்த பட்சிகள் கூறுகின்றன.

அஞ்சலி மேலும் பேசுகையில், “கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும்.

சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும். நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை”, என்றார்.