ஏப்ரல் 4 ம் தேதி முதல் “தரைப்படை” திரைப்படம் வெளியாகிறது

ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் P.B.வேல்முருகன் தயாரிப்பில், ராம்பிரபா இயக்கியுள்ள படம் ‘தரைப்படை’. ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் மூன்று அறிமுக நடிகைகள் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அபகரிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து கேங்ஸ்டர் கும்பல் அந்த பணத்தை கைப்பற்ற, அவர்களிடம் இருந்து மற்றொருவர், என்று அந்த பணம் கைமாறிக் கொண்டே போகிறது. பல்வேறு வகையில், பல்வேறு மனிதர்களிடம் பயணிக்கும் அந்த பணம் இறுதியில் என்னவானது, என்பதை விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘தரைப்படை’.

இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும் வகையில் உருவாகியிருப்பதோடு, படத்தின் கதையம்சம் மொழிகளை கடந்து பான் இந்தியா படமாக மக்களை கொண்டாட வைக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், இப்படத்தில் ஹீரோ யார்?, வில்லன் யார் ? என்பதை யூகிக்க முடியாதபடி வித்தியாசமான வகையில் கதாபாத்திரங்களையும், அவர்களது செயல்களையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராம்பிரபா, இப்படத்தின் திரைக்கதை இதுவரை பார்த்திராத வகையில் வித்தியாசமாக இருக்கும், என்று தெரிவித்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘தரைப்படை’ தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தை விக்கி பிலிம்ஸ் வெளியிடுகிறது.

–Siva.PRO

Share this:

Exit mobile version