தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம்!

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி உள்ளனர்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தை கருணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்தனர். 90-களில் வெளியான பல படங்களின் வெளிநாட்டு உரிமைகள் மற்றும் ஆடியோ உரிமைகளை வாங்கி வெளியிட்டு வந்தனர்.
கருப்பு ரோஜா, அஜித் நடிப்பில் வெளியான ஏகன், விஜய் நடிப்பில் வெளியான வில்லு,  ஆர்யா நடிப்பில் சர்வம், ஜெயம் ரவி மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் கூட்டணியில் வெளியான பேராண்மை, வசந்தபாலனின் சூப்பர் ஹிட் படமான அங்காடித் தெரு, நந்தலாலா, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட பல படங்களையும் ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில் அந்த நிறுவனம் சினிமாவில் இருந்து விலகி இருந்தனர்.