திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’

பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து ஒரு காதல் கதை.’முதல் நீ முடிவும் நீ’ குறும்படம்.
பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து ‘முதல் நீ முடிவும் நீ’ என்றொரு குறும் படம் உருவாகியுள்ளது.
பூமியின் உயிரின இயக்கங்களுக்கு நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் அடிப்படையாக உள்ளன.
அதேபோல் காதலுக்கும் காதல் வெற்றி அடையவும் இவை  மூல காரணமாகவும் அடிப்படையாகவும் உள்ளன, என்பதுடன் இந்தப் பஞ்சபூத சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் காதலில் வெற்றி பெறலாம் என்கிற கருத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் குறும்படம் தான் ‘முதல் நீ முடிவும் நீ ‘
இப்படத்தை உதய பிரகாஷ் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
காதல் வெற்றியடைய  பஞ்சபூதங்கள் எப்படி இயங்குகின்றன என்று இக் குறும்படத்தில் சொல்லியிருக்கிறார். கருத்திலும் கதையமைப்பிலும் ஒருபெரும் படத்திற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது இக்குறும் படம்.
இப்படத்தின் நாயகனாக அருண் பிரசாந்த், நாயகியாக சங்கீதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  நாயகி சங்கீதா ‘கிமு கிபி ‘ படத்தில் நடித்தவர். தற்போது நடன இயக்குநர் ராபர்ட் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .
இப்படத்திற்கான ஒளிப்பதிவு ஹரிபாலாஜி, இசை சந்தோஷ் ஆறுமுகம், எடிட்டிங் லோகேஷ் ஆறுமுகம்.
ரொமான்டிக் லவ் ஸ்டோரி என்கிற வகையில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு மதுரையில் பத்து நாட்கள் நடைபெற்றுள்ளது.இப்படைப்பு ஒரு திரைப்படத்திற்கான மெனக்கெடல்களுடன் உருவாகியுள்ளது .
‘இறைவியே துணைவியே ‘ என்றொரு பாடலும் இதில் உண்டு.இந்தப் பாடலை ஹரிஷ்மா மனோ வசந்த் ராஜா எழுதியுள்ளார். அஸ்வின் ஜான்சன் ஜெமிமா ரூபாவதி பாடியுள்ளனர். இந்தப்பாடல்  இசை சார்ந்த பல்வேறு  இணையதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
25 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் பார்த்தவர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது.
முதல் நீ முடிவும் நீ குறும்படத்தை திரைப்படத் தயாரிப்பாளர்  கே.ராஜன், நடிகர் விமல்,  நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த் ஆகியோர் இப்படத்தைப் பார்த்து விட்டுப் பாராட்டியதுடன்  இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.
Unknown Productions in clean love story. A never told before tale of poetic and fresh love.  #MuthalNeeMudivumNee short film First look launched by @ActorVemal Producer #KRajan