கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!

Chinna Marumagal | 2nd to 6th June 2025 - Promo

தன்னம்பிக்கையின் சிலையாக தமிழ்ச்செல்வி – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு, தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொல்கிறாள். அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கர்ப்பம் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.

தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள்? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா?, அவள் மருத்துவகனவு என்னவாகும்? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

Exit mobile version