Category: Tamil News

 • சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண்ணை வெட்டிய காதலன்: நடந்தது என்ன?

  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலையை போன்று, சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இன்னொரு காதல் கொடூர சம்பவம் நேற்றிரவு நடந்தது. பெண் ஒருவரை அவரது காதலன் அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு தானும் ரெயில் முன் பாய்ந்தார். இருவரும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடை சேர்ந்தவர், தேன்மொழி, 25. சென்னை, எழும்பூரில் உள்ள, தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, ‘ஈகா’ தியேட்டர் அருகே உள்ள, தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில், மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த… Continue reading "சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண்ணை வெட்டிய காதலன்: நடந்தது என்ன?"

 • நடிகர் மீது நடிகையின் பாலியல் புகார்: உண்மையா, பொய்யா?

  இந்தி நடிகர் நானா படேகருக்கு (காலா வில்லன்) எதிராக பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா (தீராத விளையாட்டு பிள்ளையில் விஷால் ஜோடி) வைத்த‌ பாலியல் குற்றச்சாட்டுக்கு, போதிய ஆதாரமில்லை என, மும்பை நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நானாவும் தனுஸ்ரீ தத்தாவும் இணைந்து நடித்த ஒரு படம் 2008ல் வெளியானது. அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நானா படேகர் தன்மீது பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அதற்கு அந்த படத்தின் நடன பயிற்சியாளர் கணேஷ் ஆச்சார்யா உதவியதாகவும் தெரிவித்தார். இது குறித்து போலீஸிலும் வழக்குப்பதிவு… Continue reading "நடிகர் மீது நடிகையின் பாலியல் புகார்: உண்மையா, பொய்யா?"

 • Ajith’s warning or order? Who is being targeted by ‘thala’?

  போனி கபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில் அஜித்- வித்யா பாலன்-ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது. இதில், ரசிகர்கள் தல என்று போற்றும் அஜித் பேசும் ‘ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்திறீங்க’ என்ற வசனம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது அஜித் தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள உத்த‌ரவு என்றும், இனிமேல் அவர்களில் யாராவது மற்ற நடிகர்களை கீழ்த்தரமாக பேசி, அவர்களின் ரசிகர்களுடன் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ தகராறில் ஈடுபட்டால் தல சும்மா… Continue reading "Ajith’s warning or order? Who is being targeted by ‘thala’?"

 • அதிமுகவில் சேர்ந்த ராதாரவி, அதிரடி ஆரம்பம்

  தடாலடி பேச்சுக்கு பாப்புலரான ராதாரவி, சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா குறித்து இழிவாக பேசியதால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்து தன்னை மறுபடியும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், நடிகர் சங்கம் தேர்தல் குறித்து பேட்டி அளித்த அவர், “கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்து இருக்கிறது. விஷால் மீது ஏமாற்றம்… Continue reading "அதிமுகவில் சேர்ந்த ராதாரவி, அதிரடி ஆரம்பம்"

 • முதல்வர், கவர்னர் சந்திப்பு: நடந்தது என்ன?

  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜ்பவனில் நேற்று சந்தித்துப் பேசினார். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், எம் பி, எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்த சில மணி நேரத்திலும், ஆளுனர் டில்லி சென்று திரும்பிய அடுத்த நாளும் இந்த சந்திப்பு நடந்ததால் அரசியல் வட்டரங்களில் பரபரப்பு நிலவியது. டிஜிபி நியமனம், தலைமைச்செயலாளர் நியமனம், 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநருடன் முதல்வர் பேசியதாக கூறப்பட்டாலும், அரசியல் விஷயங்களும் அலசப்பட்டதாகவே தெரிகிறது. மேலும், டெல்லியில் 15ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில்… Continue reading "முதல்வர், கவர்னர் சந்திப்பு: நடந்தது என்ன?"

 • மறுபடியும் இணையும் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ், அப்போ அது உண்மை தானா?

  விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் நடுவில் ஒரு இது என ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்தாவது முறையாக இருவரும் ஜோடி சேர்ந்து வெறும் வாய்களுக்கு அவல் கொடுத்துள்ளனர். அஜித்தின் விஸ்வாசம் படத்தை வெளியிட்ட‌ கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அவரது ஜோடி. படத்துக்கு க/பெ ரணசிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் ஏற்கெனவே பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை, இடம்பொருள்… Continue reading "மறுபடியும் இணையும் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ், அப்போ அது உண்மை தானா?"

 • குடும்பத்திடம் குட்டு வாங்கிய ஸ்டாலின், கூட்டணிக்கு குட்பை?

  திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 38க்கு 37 தொகுதிகளை ஜெயித்ததில், மு க ஸ்டாலின் உற்சாகத்தில் இருக்க, அவரது குடும்பத்துக்கு அதில் அவ்வளவாக சந்தோஷம் இல்லையாம். இந்த 37இல், வெறும் 19 மட்டுமே திமுக வேட்பாளர்கள். மீதி 18 பேரும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். அதிலும் 10 பேர் காங்கிரஸ்காரர்கள். ‘கூட்டணியே இல்லாம நின்னிருந்தாலும் திமுக தான் அனைத்து தொகுதிகளிலும் ஜெயித்திருக்கும். ஸ்டாலின் 2014ல் ஜெயலலிதா ஃபாலோ செய்த ஃபார்முலாவை பின்பற்றி கூட்டணி இல்லாமல் திமுக சார்பாகவே… Continue reading "குடும்பத்திடம் குட்டு வாங்கிய ஸ்டாலின், கூட்டணிக்கு குட்பை?"

 • சமீராவின் கவர்ச்சி, ரசிகர்கள் அதிர்ச்சி

  வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை சமீரா ரெட்டி. அசல், வெடி, வேட்டை ஆகிய படங்களிலும் நடித்த இவர், தொழிலதிபர் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன் மணந்து கொண்டு செட்டில் ஆனார். ஏற்கனவே 4 வயது மகனுக்கு தாயான சமீரா தற்போது மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தனது மகன் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். அங்கு கடற்கரையோரம் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரின் அழகை பாராட்டி இருந்தார்கள்.… Continue reading "சமீராவின் கவர்ச்சி, ரசிகர்கள் அதிர்ச்சி"

 • தில்லியில் கவர்னர்: திக் திக் நிமிடங்கள்

  தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்குள் மோதல் எழுந்துள்ள நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீர் பயணமாக புது தில்லி புறப்பட்டு சென்றார். இது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை பரப்பியது. தலைநகரத்தில் அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து அமித்ஷாவுடன் ஆளுனர் ஆலோசனை நடத்தினார். இது குறித்து ஒரு சில ஊடகங்கள், “வழக்கமான நல விசாரிப்புகள் மற்றும் வாழ்த்துக்கள் முடிந்த பிறகு நேரடியாக தமிழக அரசியல் குறித்து தான் இருவரும் பேசியுள்ளனர். தமிழகத்தில்… Continue reading "தில்லியில் கவர்னர்: திக் திக் நிமிடங்கள்"

 • விஷாலுக்கு எதிராக வியூகம்: பரபரப்பில் நடிகர் சங்கம்

  விரைவில் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை விட பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளரும் கல்வியாளருமான‌ ஐசரி கணேஷ் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர்… Continue reading "விஷாலுக்கு எதிராக வியூகம்: பரபரப்பில் நடிகர் சங்கம்"