Category: Tamil News

 • செருப்பு வீச்சு, வழக்குகள், போராட்டங்கள்: கமலுக்கு எதிராக சதி வலை பின்னப்படுகிறதா?

  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பள்ளப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பேசிய பேச்சுதான், அவருக்கு மிகப் பெரிய எதிரியாக அமைந்து விட்டது. இப்போதுவரை பாஜக, அதிமுக, இந்து அமைப்புகள் உள்ளிட்டவர்களின் புகார்கள், கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நாடு முழுவதும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன, போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவ்வளவு ஏன், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது… Continue reading "செருப்பு வீச்சு, வழக்குகள், போராட்டங்கள்: கமலுக்கு எதிராக சதி வலை பின்னப்படுகிறதா?"

 • பாடகியை படுக்கைக்கு அழைத்த பிரபல‌ இயக்குநர்: பரபரப்பு புகார்

  பெரும் புயலை கிளப்பிய ‘மீ டூ’ விவகாரம் இப்போது தான் சற்று ஓய்ந்துள்ள நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருக்கும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட பல படங்களில் பாடி மிகவும் பிரபலமானவர் பிரணவி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர் கூறியதாவது: “நான் சினிமாவில் பாட பலரிடம்… Continue reading "பாடகியை படுக்கைக்கு அழைத்த பிரபல‌ இயக்குநர்: பரபரப்பு புகார்"

 • தமிழிசை கொளுத்தி போட்ட பட்டாசு, ஷாக் ஆன ஸ்டாலின்

  நாம் ‘ஸ்டாலின், ராவ் சந்திப்பு: பாஜக அணிக்கு தாவுமா திமுக?’ என்று செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஒரு பூகம்பமே வெடித்தது. அதற்கு காரணம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட ஒரு திடுக் தகவல் தான். திமுக தலைவர் மு க ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருவதாக தமிழிசை சொல்ல‌, தீ பற்றிக் கொண்டது திமுக மற்றும் காங்கிரஸ் கூடாரங்களில். பாஜகவுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விட,… Continue reading "தமிழிசை கொளுத்தி போட்ட பட்டாசு, ஷாக் ஆன ஸ்டாலின்"

 • என்னை அதற்கு அழைக்கிறார்கள், சோனியா அகர்வால் வேதனை

  36 வயது ஹீரோவுக்கு எல்லாம் அம்மாவாக நடிக்க என்னை அழைக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர களத்தில் குதித்துள்ள சோனியா அகர்வால். சமீபத்தில் வெளியான தடம் மற்றும் அயோக்யா படங்களில் நடித்த சோனியா, “தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறேன். சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்று இருந்தேன். அங்கு ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் சினிமாத்துறையினர் என்னை ஒரு மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர். சிலர் என்னை மும்பைக்கே… Continue reading "என்னை அதற்கு அழைக்கிறார்கள், சோனியா அகர்வால் வேதனை"

 • குடிபோதை, கோபம், ஆவேசம்: என்ன தான் ஆச்சு டாப்சிக்கு?

  தமிழ் ரசிகர்கள் மனதை ஆடுகளம் மூலம் வெள்ளாவி வெச்சு வெளுத்த டாப்சி, தற்போது சர்ச்சை மீது சர்ச்சை வந்து என்னை சேரும் என்னும் ரீதியில் வலம் வருகிறார். சமீபத்தில் அவர் குடிபோதையில் கலாட்டா செய்ததாக பாலிவுட் நடிகர் ஒருவர் கூறியிருந்த நிலையில், தற்போது தன்னை கேவலமாக பேசியவரை டாப்சி வறுத்தெடுத்துள்ளார். டாப்சியை சமூக வலைத்தளத்தில் சிலர் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். ஒருவர் உங்கள் உடல் மீது எனக்கு விருப்பம் என்று பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த டாப்சி எனக்கு மூளையில் ஒரு பகுதியை பிடிக்கும் என்றார்.… Continue reading "குடிபோதை, கோபம், ஆவேசம்: என்ன தான் ஆச்சு டாப்சிக்கு?"

 • ஸ்டாலின், ராவ் சந்திப்பு: பாஜக அணிக்கு தாவுமா திமுக?

  திமுக தலைவர் மு க ஸ்டாலினை தெலுங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான கே சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் மூன்றாவது அணிக்கு திமுகவை இழுப்பது தான் என சொல்லப்பட்டாலும், ராவ் பாஜகவின் மறைமுக தூதர் என்றே பார்க்கப்படுகிறது. ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு நேற்று மாலை 4.30 மணியளவில் சந்திரசேகர ராவ் வந்தார். அவரை ஸ்டாலினும், திமுகவின் பொருளாளர் துரைமுருகனும் கட்சியின் முதன்மைச் செயலர் டி ஆர் பாலுவும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பிறகு அவர் ஸ்டாலினை… Continue reading "ஸ்டாலின், ராவ் சந்திப்பு: பாஜக அணிக்கு தாவுமா திமுக?"

 • சிம்புவுக்கு பெண் பார்த்தாச்சு, விரைவில் டும் டும் டும்

  சிம்பு விரைவில் திருமணம் செய்துக் கொள்வார் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இப்போது அதை மெய்ப்பிக்கும் விதமாக, அந்த நிமிடம் பட விழாவில் கலந்துக் கொண்ட கூல் சுரேஷ், சிம்புவுக்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். கூல் சுரேஷ் சிம்புவின் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர‌து குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர், டி ராஜேந்தர் நடத்தி வரும் லட்சிய திமுக‌ கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார். அந்த நிமிடம் என்ற‌ பட விழாவில் கலந்துக் கொண்ட சுரேஷ், சிம்புவுக்கு… Continue reading "சிம்புவுக்கு பெண் பார்த்தாச்சு, விரைவில் டும் டும் டும்"

 • முதல்வருடன் விமானத்தில் பயணித்த மர்ம நபர்

  ஓரு மூத்த பத்திரிகையாளரின் டிவிட்டர் பதிவால் நேற்று அரசியல் மற்றும் மீடியா வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியது. நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு தகவல் வந்ததாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர் ஆர் கே ராதாகிருஷ்ணன், இவ்வாறு ஆங்கிலத்தில் கூறியிருந்தார்: “சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானத்தில், தமிழக முதல்வர் 1டி இருக்கையில் முதலில் அமர்ந்திருந்தார். பின்னர் 1எஃப் இருக்கைக்கு சென்றார். விமானம் கிளம்பிய பிறகு, 3ஏ இருக்கையில் இருந்த‌ சேகர் ரெட்டி முதல்வர் அருகில் சென்று அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். விமானம் இலக்கை நெருங்கும்… Continue reading "முதல்வருடன் விமானத்தில் பயணித்த மர்ம நபர்"

 • அரசியலில் குதிக்கும் பிரபல இளம் தமிழ் நடிகை?

  தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் தென்னிந்தியா முழுக்க ரசிகர்களை பெற்றிருக்கும் கீர்த்தி சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. இதற்கு காரணாம், கீர்த்தி சுரேஷின் தந்தையும் மலையாள சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ் பாஜகவில் இருப்பதும், அவர், தனது மனைவியும் கீர்த்தியின் தாயாருமான‌ மேனகாவுடன் சமீபத்தில் தில்லியில் மோடியை சந்தித்ததுமே ஆகும். இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து, மேனகா சுரேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழில் ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் கதாநாயகியாக நடித்த மேனகா… Continue reading "அரசியலில் குதிக்கும் பிரபல இளம் தமிழ் நடிகை?"

 • பாஜகவில் இணைகிறாரா வாசன்? அழகிரி அறிக்கையின் பின்னணி

  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட‌ அறிக்கை தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை கிளப்பியது. அந்த அறிக்கையில் அவர், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. காங்கிரசில் வாழ்க்கையை தொடங்கியவர்கள் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம். எனவே, கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும். அவர்களுக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன,” எனக் கூறியிருந்தார். மேலும் அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுகவுடன்… Continue reading "பாஜகவில் இணைகிறாரா வாசன்? அழகிரி அறிக்கையின் பின்னணி"