அமைச்சருடன் சந்திப்பு தமிழ்நாடு அரசு கடை உரிமையாளர்கள் நலச்சங்கம்
தமிழ்நாடு அரசு கடை உரிமையாளர்களின் நலச் சங்கத்தின் சார்பாக தலைவர் ஹரிகுமார் பாபு அவர்களின் தலைமையில், சங்க நிர்வாகிகளுடன்.தலைமை செயலகத்திற்கு சென்று,பால் வளத்துறை அமைச்சர்,மாண்புமிகு அமைச்சர் நாசர் அவர்களை சந்தித்தனர் .
தமிழ்நாடு அரசு கடை உரிமையாளர்கள் நலச்சங்கம் திருவள்ளூர் தாலுக்காவில் உள்ள மாதவரத்தில் இருப்பதாலும், திருவள்ளூர் மாவட்டச் செயலருமான, மாநில அமைச்சருமான ,மாண்புமிகு அமைச்சர் திரு நாசர் அவர்களை இச்சங்கத்தின், கவுரவ ஆலோசகராக இருக்கும்படி விண்ணப்பித்தனர் .
இச்சங்கம் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சி ,சுற்றுலாத்துறை, வீட்டு வசதி வாரியம்,மற்றும் அறநிலைத்துறை என்று அரசுக்கு நேரடியாக வாடகை தரும் கடை உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாடு முழுவதும் ஒரே சங்கமாக தமிழ்நாடு அரசு கடை உரிமையாளர் நலசங்கம். என்று உருவாக்கப்பட்டுள்ளது.
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்பவரும் அமைச்சரிடம் உதவி கோரினார்.அமைச்சர் அஸ்வினுக்கு அறிவுரை கூறினார்.
முதலமைச்சரே உங்கள் வீட்டிற்கு வந்து நலத்திட்ட உதவிகளை செய்தார்.
சில நல்ல திட்டங்களின் கால தாமதத்திற்காக நீங்கள் குறை கூறியது, நான் வருத்தப்பட்டேன் என்றார்.
ஒரு சில அதிகாரிகள்தான் எங்களது நலத்திட்டங்களில் தாமதமானது, என்று நினைத்து அப்படி சொன்னதற்காக அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார்.
எங்களது நலத்திட்டங்களில் 90% முடிவடைந்துவிட்டது, ஒரு சில மாதங்களில் முழுவதுமாக முடிவடைந்தஉடன். நரிக்குறவர் சமூகத்தின் சார்பாக முதல் அமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். நாங்கள் வந்து நன்றியும் சொல்வோம், என்று அஸ்வினியும் அவர்களது சமூகத்தினரும் அமைச்சரிடம் கூறினர் .
இச்சங்கத்தில் ஏற்கனவே கௌரவ ஆலோசகர்,மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சுதர்சனம் அவர்கள் இருப்பது ,சங்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கின்றனர் .
ஆனாலும் இப்பொழுது தமிழ்நாடு அளவில் ஒரே அங்கமாக இருப்பதால் மாண்புமிகு அமைச்சர் கௌரவ ஆலோசனைகள் இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று விண்ணப்பித்தனர் .
இவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வியாபாரிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் .
இந்த சங்கத்தில் வெளிநாட்டினர் யாரும் இல்லாததால், வெளிநாட்டில் இருந்து எந்த நிதியும் வராததாலும் அமைச்சர்கள் ஆலோசகராக இருக்கலாம் என்று சட்ட ஆலோசகர்கள் கூறியுள்ளனர் .
இது ஒரு சுய உதவிக் குழுவாக இருந்து வர்த்தகத்தை நடத்துவதால்,தகுந்த நேரத்தில் கிடைக்கும் இவர்களின் ஆலோசனைகள் ஒவ்வொரு வர்த்தகருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்றனர் .
மேலும் இச்சங்கத்தின் சேர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 8610014942 / 8190091800
போட்டோ : பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களுடன், தமிழ்நாடு கடை உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் அரிகுமார் பாபு மற்றும் நிர்வாகிகள் .