VISHAL 31 – Official Announcement

VISHAL 31 - Official Announcement | Vishal | Thu.Pa.Saravanan | Yuvan Shankar Raja | VFF

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் பிரமாண்ட திரைப்படம் விஷால்#31 ! 
தமிழின் முன்னணி நடிகர் விஷால் தயாரித்து, நடிக்கும் அடுத்த படத்தினை  புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு  விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியியாகிறது.,
புதுமுக இயக்குநர் து.பா.சரவணன்   “குள்ளநரிக்கூட்டம்” மற்றும் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்கள் குவித்த “தேன்” ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவர் சமீபத்தில் இயக்கிய “எது தேவையோ, அதுவே தர்மம்” குறும்படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுக்களை குவித்தது.  இக்குறும்படத்தினால் ஈர்க்கபட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு  தந்துள்ளார். அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்  சாமானியன் ஒருவனின் கதை தான் இத்திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. 
விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடுவமைப்பு செய்கிறார். படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முன் தயாரிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.