மலையடிவாரத்தில் நடக்கும் காதல் கதை
புதுமுகங்களுடன் அறிமுகமாகிறார் இயக்குனர் சாலமோன் கண்ணன் |
பிரபல இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பாடம் பயின்றவர் சாலமோன் கண்ணன் இவர் கதை- திரைக்கதை – வசனம்.-எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பெயர் தான் ” திருமாயி “. இவர், இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் கதையை பற்றி கூறியதாவது, ” மலையடிவாரத்திலிருந்து மலைமேல் வாழும் மக்களுக்கான பொருட்களை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு பாட்டுப் பாடியபடி கொண்டு போய் கொடுத்து வரும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இந்தப் படத்தின் நாயகன் நாயகி.தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு முழுவதும் வேறு பட்டு சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படமிது.” என்று கூறினார்.மேலும் அவர்,
“இதன் படப்பிடிப்பு தேனி, அல்லிநகரம், கும்பக்கரை, பூதிபுரம், காமக் காபட்டி, சின்னமனூர் வருசநாடு’ வடுகபட்டி, அன்னஞ்சி, கொடைக்கானல், சீலையம்பட்டி, இடங்களில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது” என்ற கூடுதல் தகவலையும் நமக்கு சொன்னார்”
கதையின் நாயகனாக ராம்சந்த் அறிமுகமாக அவருக்கு ஜோடியாக மலையாள பட உலகை சார்ந்த அன்ஷிதா நடித்துள்ளார். கொடூர வில்லனாக கே.எஸ். மாசாணமுத்து அதிமுகமாகிறார் மேலும் இதில் ராணி, பரவை சுந்தராம்பாள் , நம்பியார் ராஜா, மொட்டைவிஜி, குதிரை முருகன், முரளி கோவிந்த்ராக், முத்துக் காளை, நெல்லை சிவா, கார்த்தி, வீரமணி, பெங்களூர் அலிஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
குமரன்.ஜி.ஒளிப்பதிவையும், சாய் சுரேஷ் படத்தொகுப்பையும்,
எழுமலை ‘ சுப்ரமணி, மகி, காலோமன்கண்னன் நால்வரும் பாடல்களையும், இசைவாணன் பாடலுக்கான இசையையும், எஸ்.பி.பூபதி பின்னனி இசையையும், ஆர்.கே.முரளி சண்டைப் பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும்,
கவனித்துள்ளனர்.
கே.எஸ். மாசாணமுத்து . திருப்பூர் சிவகுமார், சோசன் சஞ்சய், அன்னஞ்சி கார்த்தி நால்வரும் சாக் ஷினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ” திருமாயி ” படத்தை தயாரிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் ஒரு பாடல் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார் சாலோமோன் கண்ணன். விஜயமுரளி கிளாமர் சத்யா PR0