The Appreciation Voice Note from Smt Vanathi Devi wife  of late  Military Havildar Mr Palani 

 Military Havildar Mr Palani  who passed away in China border recently about Actor Udhaya’s Security Short Film after watching
https://youtu.be/-5yGeJJfHgA

திருமதி.வானதிதேவி உருக்கமாக திரு . உதயாவிடம் பேசியது

இந்த கொரானா காலக்கட்டத்தில் செக்யூரிட்டி என்ற குறும்படத்தை முதன் முறையாக இயக்கி நடித்துள்ளேன். இது நம் தாய் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓர் அர்பணிப்பு
குறிப்பாக சமீபத்தில் எல்லைக் காக்கும் பணியில் வீர மரணம் அடைந்த ஹவில்தார் திரு. பழனி அவர்களுக்கு சமர்பணம்.
இன்றைய காலக்கட்டத்தில் கலாச்சார சீரழிவாக திகழ்ந்த ஒரு சில அன்னிய நாட்டு செயலிகள் பற்றியும், ஆன்லைன் வகுப்பில் தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் சங்கடங்களையும் இக் குறும்படத்தில் சுட்டிக்காட்டி இருந்தோம்.
இக்குறும்படத்தை பாராட்டி என்னை வாழ்த்திய இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள்.  உற்சாக வார்த்தைகளால் ஊக்கம் கொடுத்த இயக்குனர்  திரு . K. பாக்யராஜ் அவர்கள் , திரு. பார்த்திபன் அவர்கள்.,       திரு. கே.எஸ். ரவிகுமார் அவர்கள். திரு. சேரன் அவர்கள், திரு. மனோபாலா அவர்கள்., திரு. ஏ.எல் விஜய் அவர்கள் , திரு. மகிழ் திருமேனி அவர்கள் திரு. ஐசரி கணேஷ் அவர்கள். திரையரங்க உரிமையாளர்களின் முன்னோடி திரு. திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் எப்பொழுதும் என் முயற்சிக்கு ஊக்கம் கொடுக்கும் நண்பரும், நடிகருமான திரு.விவேக் அவர்கள். மற்றும் திரையுலக ஜாம்பவான்கள், கலை உலக பிரம்மாக்கள். , தயாரிப்பாளர்கள் , முக்கிய நடிகர்கள், நடிகைகள்                   பத்திரிக்கை, இணைய தளம் மற்றும்  ஊடக நண்பர்கள் , நடிகர் சங்க உறுப்பினர்கள் , நாடக கலைஞர்கள். பொதுமக்கள், நண்பர்கள் என எல்லோரும் என்னையும் என் படக் குழுவினரையும் பாராட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்று எனக்கொரு வாட்ஸ் ஆப் பதிவு வந்தது. அதில் “நான் ஹவில்தார் பழனியின் மனைவி பேசுகிறேன் “என்று கூறி, செக்யூரிட்டி குறும்படத்தில் எனது கணவரையும், எங்கள் குடும்பத்தினரையும்,  என் கணவரைப் போன்று உயிர்க் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும் பெருமைப் படுத்தி உள்ளீர்கள் என்று கூறி,  எங்களை பெருமை படுத்தியுள்ளார்.
விருதுகளில் ஆகச் சிறந்த விருதாக நாங்கள் கருதுவது , என்னையும் என் படக் குழுவினரையும் ஹவில்தார் திரு. பழனியின் மனைவி அவர்கள் பாராட்டியது.
எந்த நோக்கத்திற்காக இக் குறும்படத்தை உருவாக்கினோமே அவ்விதமே ராணுவ வீரர்களுக்கு மரியாதை ஏற்படும் விதமாக அமைந்தது இயக்கி நடித்த எனக்கும், எனது குழுவிற்கும் பெருமை.
ஊக்கமளித்து உற்சாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.  
                                                                                                              அன்புடன்
                                                                                                                   உதயா