கால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி

Call Taxi Tamil Movie | Kikku Semma Kikku Lyrical | Santhosh,Ashwini | Vaikom Vijayalakshmi | Kabila

தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலட்சுமி இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பாடகி வைக்கம் விஜய லட்சுமி தற்போது ‘கால் டாக்ஸி’ படத்தில் இடம் பெறும் ‘கிக்கு செம்ம கிக்கு…’ என்ற பாடலை பாடியுள்ளார். குத்துப்பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார். தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு வரிகள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர்.

கால் டாக்ஸி படத்தை கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வருகிறார். தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட்அஜய்யும் கவனித்துள்ளார்கள்.

இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக “மெர்லின்”, “மரகத காடு”, “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.