*5 மொழிகளில் 5 பிரபலங்கள் வெளியிட்ட மாநாடு டீசர்*
*சிலம்பரசன் பிறந்தநாளில் 5 மொழிகளில் வெளியான மாநாடு டீசர்*
இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் நாயகன் சிலம்பரசன் TR நடித்து வரும் படம் “மாநாடு”.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் TR நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.
இந்தநிலையில் சிலம்பரசனின் பிறந்தநாளான இன்று பிற்பகல் 2.34 மணியளவில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது..
மாநாடு படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் இயக்குநர் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், தெலுங்கில் நடிகர் ரவிதேஜா மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டு படத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்..
தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்தப்படத்திற்கு ரீவைண்ட் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக சிலம்பரசனின் பட டீசர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் தனது பிறந்தநாளில் திரையுலகப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் …
John PRO