கிளாமர் சத்யா:PRO
மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்
கே.ஜே.யேசுதாஸ் அவருடைய மகன் விஜய் யேசுதாஸ் அவருடைய மகள். அமயா விஜய் யேசுதாஸ் என மூன்று தலைமுறையும் இணைந்து தட்சிணாமூர்த்தி இசையில் பாடிய ” ஷியாமாராகம்” மலையாள படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது.
இந்த விழாவில் இதில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன், சுதா மகேந்திரன் ‘ இவர்களின் மகள் மதுவந்தி பின்னனி இசையமைத்த சரத், விஜய் யேசுதாஸ், அமயா, இயக்குனர் சேது இயாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த் இணை தயாரிப்பாளர்கள் கண்ணன், பினோஜ் திருமதி.தட்சிணாமூர்த்தி, தயாரிப்பாளரும் பி .ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
கே.ஜே.யேசுதாஸ் பேசுகையில், ” பகவான் கொடுத்த வரபிரசாதம்தான் நான் இன்னமும் பாடிக் கொண்டிருப்பது. குருவை என்றும் மறக்க கூடாது. கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்திற்கு விருதுகள் கிடைக்கும்.” என்று வாழ்த்தினார்.
ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், ” இந்தப் படத்தில் பாகவதராக நடித்திருக்கிறேன். எனக்கு இந்த வேடத்தை சிபாரிசு செய்தவர் யேசுதாஸ் அவர்கள் தான். எனக்காக அருமையான ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” என்று பேசினார்.
இயக்குனர் சேது இய்யாள் வரவேற்று பேசினார். விஜயமுரளி நன்றி தெரிவித்தார்.