ராஜூ முருகன் தயாரிப்பில் உருவான “கொஞ்சம் பேசு” என்ற ஆல்பத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி பிரகாஷ்.

Konjam Pesu Music Video | Raju Murugan | Yugabharathi | Pradeep Kumar | Sanchita Shetty | Narean

என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு என தமிழில் தற்போது ஆல்பம் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் கொஞ்சம் பேசு என்ற ஆல்பம் உருவாகி உள்ளது. இது  குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ராஜூ முருகன் தயாரித்திருக்கிறார். இந்த பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் நேற்று தங்களது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர், இந்த பாடல் சோனி மியூசிக்கில் வெளியானது,
இதில் ராஜூ முருகனின் உதவி இயக்குனர் சஞ்சய்  நடிக்க அவருடன் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். கொஞ்சம் பேசு எனத் தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுத ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்ற நரேன் இசையமைத்துள்ளார், இந்த பாடலை இயக்குனர் ராஜு முருகனின் குக்கூ ரெக்கார்ட்ஸ் குழுவினர் இயக்கியுள்ளனர், இதனை பிரதீப் குமார், நித்யஸ்ரீ பாடியுள்ளனர். சாண்டி நடனம் அமைக்க பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார், இதனை ஜிப்சி, அருவி போன்ற படங்களில் எடிட்டர் ஆக பணியாற்றின ரேமண்ட் எடிட் செய்துள்ளார்.  இந்த பாடல் பற்றி சஞ்சய் கூறியதாவது, ஜிப்சி படத்துக்காக நாடு முழுக்க இருக்கும் தனியிசை பாடகர்களை சந்தித்தபோது எங்களுக்கு இந்த யோசனை தோன்றியது. நரேனை பார்த்ததும் பாடலாக உருவாக்க திட்டமிட்டோம். காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறுசிறு விரிசல்களை பிரிவாக மாறாமல் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது என அவர் கூறினார்.

https://youtu.be/O18c0dhb7Y0

–vrcs