சல்மான் கான் “தபாங் 3” டிரெய்லர் வெளியீடு !

Dabangg 3: Official Tamil Trailer | Salman Khan | Sonakshi Sinha | Prabhu Deva | 20th Dec'19

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில்  டிசம்பர் 20 வெளியாகிறது.

தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் டிரெயலர் நேற்று புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.

தபாங் 3 படக்குழு வீடியோ கான்ஃபரஸிங் மூலம் மும்பையில் இருந்து சென்னை ஹைதராபாத், பெங்களூரு ரசிகர்களை சந்தித்தது. ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் உரையாடி படக்குழு டிரெய்லரை வெளியிட்டது. புதுமையான முறையில் அரங்கேறிய டிரெய்லர வெளியீடு பலரது கவனத்தையும் ஈர்த்தது. தபாங் 3 டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் பிரபுதேவா

இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். தபாங் வெற்றியை தொடர்ந்து தபாங் 3 எடுக்கிறோம் எனும்போதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. மொத்தப் படக்குழுவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தியா முழுதும் இப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்க்காக ரசிகர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக சந்திக்க உள்ளோம். படத்தின் டிரெய்லர் உங்களை கவர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படமும் உங்களை கவரும் என்றார்.

சல்மான் கான் பேசியதாவது…

தென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விகரம் படங்களை விரும்பி பார்ப்பேன். இங்கே இப்போது ஹிந்தி சினிமாவை விடவும் பாகுபலி, கே ஜி எஃப் என தென்னிந்திய சினிமாக்கள் தான்  வசூல் குவிக்கின்றன. தமிழில் குறிப்பாக விஜய்யின் போக்கிரி படத்தை நான் ரீமேக் செய்து நடித்தேன். அவரது தெறி, திருப்பாச்சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தபாங் 3 படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இந்தப்படம் தெனிந்திய படம் போல் தான் இதில் அதிகமாக தென்னிந்திய கலைஞர்கள் தான் வேலை பார்த்துள்ளனர். பிரபுதேவா எங்களுடைய சொத்து அவர் இப்படத்தை இயக்கியிருப்பது வெற்றிக்கு உத்தரவாதமளிப்பபது போன்றது. எனது அடுத்த படத்தையும் அவர் தான் இயக்குகிறார். தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. விரைவில் தமிழ் ரசிகர்களை நான் நேரில் சந்திப்பேன். படத்தின் டிரெயலருக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றார்.

படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

கதை திரைக்கதை – திலீப் சுக்லா  இயக்கம் – பிரபு தேவா தயாரிப்பு – சல்மான் கான், அர்பாஸ் கான், நிகில் திவேதி. தயாரிப்பு நிறுவனம் – அர்பாஸ் கான் புரட்கஷன்ஸ், ஸஃபரூன் பிராட்காஸ்ட்.-Suresh Chandra:PRO