பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..!

SAAYAM  Movie Teaser  (Tamil Movie) - Antonysamy , Vijay Vishwa, Bose Venkat, ponvannan, shainy

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள்ர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் டீசரை  நடிகர்கள் கார்த்தி மற்றும் நட்டி, இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

போஸ்ட புரொடக்சன் பணிகள் முடிந்து விரைவில் ஆடியோ வெளியீடு நடைபெறயுள்ளது .  தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.

#SAAYAM Movie Official Teaser
https://youtu.be/WCn7pV4RiOc
*vrcs