ராம்கோபால் வர்மா வின் நாயகி தமிழில் அறிமுகம்.. அந்த நாயகியின் பெயர் கிருஷ்ணா கெளதம்.. அப்புதிய படத்தின் பெயர் வசந்தம் வந்தது..

தமிழினி  திரை  வெளிச்சம்  என்கிற புதிய பட கம்பெனியார்  மற்றும்  பாரதி பட சுருள்  இணைந்து   வசந்தம் வந்தது  எனும் புதிய  படத்தை  தயாரிக்க உள்ளனர்..
இதில்   ராம்கோபால் வர்மாவின்   அடுத்த மாதம் திரைக்கு வரும்   12 ஓ  கிளாக்   ஹிந்தி பட கதை நாயகி      கிருஷ்ணா கெளதம்    இப்படத்தில் அறிமுகம் ஆகிறார்.மற்ற கதா பாத்திரங்களின்  தேர்வு நடை பெற்று வருகிறது..
கதை. திரை கதை வசனம்  எழுதி  இயக்குகிறார்  பாரதி செங்கோடு.. இவர் பல  நாடகங்களை எழுதி இயக்கியும்   பல முன்னணி படங்களை  கோவை ஏரியா விநியோகஸ்தர்  ஆகவும் இருந்து உள்ளார்.
தயாரிப்பு.. தமிழினி கண்ணன்.. இந்த படத்தின் பாடல்களை  காவல் துறை   அதிகாரி  Dr. வடுகம்  R. சிவகுமார்  IPS. எழுதி உள்ளார்.
செல்வா ஜானகி ராஜ்  இசையில்  சமீபத்தில்  மனோ, சைந்தவி, ஸ்ரீராம், பிரசன்னா, வல்லவன், முகேஷ், அனுசுப்பையா and லக்ஷ்மி அம்மா ஆகியோர் குரல்களில்  பாடல்கள் பதிவு செய்யப்பட்டன.. ஜனவரி  மாதம் பட பிடிப்பு துவங்கி  மே மாதம் திரைக்கு வருகிறது..
மற்ற தொழில் நுட்ப கலைஞர் கள்  இதர கதா பாத்திர தேர்வும்  நடந்து வருகிறது.
ஊட்டி கொடைக்கானல், பாண்டி, கோவை, பொள்ளாச்சி. கோபி செட்டி பாளையம் , வடுகம்  ஆகிய இடங்களில்  படப்பிடிப்பு நடை பெறுகிறது.
படத்தின்  5  பாடல்களை   Dr  வடுகம் R. சிவகுமார் IPS.. சத்யா ராக வேந்திரா. இயக்குனர் பாரதி செங்கோடு  ஆகியோர்   எழுதி உள்ளனர்.
தயாரிப்பு.. தமிழினி கண்ணன்.