Paramu Movie Press Meet Stills

விஜய முரளி கிளாமர் சத்தியா PRO

வீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு ”

கூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில் ” புள்ளீங்கோ” என அழைக்கப்படும் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வாழ்க்கையில் தீடீர் புயல் போல் நடைபெறும் திகிலான சம்பவங்கள்
அவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது ‘ இதன் உச்சகட்டம் என்ன ? என்பது தான் சக்சஸ் புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி உள்ள ” ப ர மு ” என்றார் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் புதுமுகமான மாணிக்ஜெய்.

பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ், சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் முழுவதும் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.

மாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன் ஊர் மக்களும் நடித்துள்ளனர்.

இந்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வருகிறது. “பரமு