“மிக மிக அவசரம்” படம் நாயகி ஸ்ரீ பிரியங்காவை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ நேரில் அழைத்துப் பாராட்டினார்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்”. லிப்ரா புரொடக்ஷன் வருகிற நவ 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.
மிக மிக அவசரம் படம் காவலர்களின் பணியில் நேரும் சிரமங்களை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது.
இப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார்.அவ்வமயம் ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.A.John:PRO