‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020
2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார்.
‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘நம்ம ஊரு ஹீரோ’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசுடன் ‘வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்’ இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வரும் பெருமைக்குரியது.
இந்நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது. பிப்ரவரி 08ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி கொச்சினிலும், மார்ச் 07ம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.
இந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 08ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை துவங்கி இருக்கிறது.
அனுமதி சீட்டுகளுக்கு www.grabmyticket.com என்ற இணைய தளத்தை அணுகுங்கள்.