KALA MASTER in association with TRENDLOUD, launches KALAFLIX, YouTube Channel
Following her incredible journey in Films ,TV and stage shows , legendary choreographer Kala fondly known as ‘Kala Master’ has now stepped into the digital bandwagon to create an opportunity to budding talents.
Known for bringing innovation and grandeur in all her shows, Kala Master has now come in association with TrendLoud, one of the biggest YouTube MCNs in South India with over 500 YouTube channels in their network, by launching her YouTube channel “Kala Flix”. TrendLoud will also be handling the digital properties of KalaFlix across all the OTTs apart from managing the YouTube channel.
“Kala Flix” will be one of its kind. Unlike the usual channels this is going to bring in reality show concept in the digital platform. It will be an interactive medium where general public will perform and celebrity guests will judge them. This channel will serve as a medium to expose the hidden talents of people from different parts of the world, of different age groups and bring them to the limelight.
Following the grand launch of the channel, there are many shows in different genres that are coming up. Some of them are
1) Chumma kizhi – a dance show wherein dance lovers from all over the world can take part and they will be judged by Kala master herself.
2) Kutty story – a short film contest, wherein budding filmmakers can register and send in their short films which will be judged by renowned directors from the film industry. And the winner gets an opportunity to be a create a web series/movie for one of the leading OTT platforms.
3) Jithu Jilaadi – this is a talent hunt where people of different age group can contest. No matter how old or young they are, if they use this opportunity rightly then KalaFlix is here to showcase it to the world.
There are also many other Celebrity shows lined up with Kala master hosting them.
Trailer of the channel: https://www.youtube.com/watch?v=pqVKo9_AwKE
கலாபிளிக்ஸ் (TAMIL)
பல நூறு படங்களில் நடன இயக்குனர்,ஆயிரக்கணக்கான மேடை நடன நிகழ்ச்சிகள், பல்வேறு பிரம்மாண்ட தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் என தனது கலை பயணத்தை தொடர்கின்ற கலா மாஸ்டர் தற்போது டிஜிட்டல் மீடியாவில் தனது பாதங்களை பதித்து புது அவதாரம் எடுக்கிறார். கலை ஆர்வம்மிக்க துடிப்புமிகு திறமைகளுக்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதே அவரது இப்புது கலை வடிவத்தின் நோக்கம். பிரம்மாண்டம் என்பதை அவரது நிகழ்ச்சிகளில் இயல்பாகவே புகுத்துவது கலா மாஸ்டருக்கு கை வந்த கலை. புது திறமைகளுக்கு எப்போதும் தோள் கொடுக்கும் கலா மாஸ்டர் இப்போது ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட யூ டியூப் சேனல்களை நிர்வகித்து வரும் டிரெண்ட்லௌடு எனும் நிறுவனத்துடன் இணைந்து துவக்கியுள்ள புத்தம் புது முயற்சி தான் கலா பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் மேடை. டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும் மற்றும் அது சார்ந்த அனைத்து டிஜிட்டல் தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. கலா பிளிக்ஸ் சேனலின் அற்புதமான துவக்கவிழா 18/08/2020 அன்று மாலை 7 மணியளவில் அழகுற அரங்கேறியது. பிருந்தா மாஸ்டர், நடிகை குஷ்பூ சுந்தர்,நடிகர் ஜெகன், சாண்டி மாஸ்டர், இயக்குனர் சமுத்திரகனி போன்ற பிரபலங்கள் கலா மாஸ்டருடன் நேரலையில் பங்கு பெற்று கலாபிளிக்ஸ் எப்படி பட்ட அருமையான வாய்ப்பினை வழங்கவுள்ளது என்பதனை விரிவாக எடுத்துரைத்தனர். தொகுப்பாளினி பிரியதர்ஷினி அந்நிகழ்வினை திறம்பட தொகுத்து வழங்கினார். கலாபிளிக்ஸ் உங்களுக்காக வழங்கும் வாய்ப்புகள் பின்வருமாறு
சும்மா கிழி.
இது நடனத்தில் திறமையும், ஆர்வமும் மிக்கவர்களுக்கான வாய்ப்பு. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். நீங்கள் அனுப்பும் நடனங்களை கலா மாஸ்டரே பார்த்து வெற்றியாளர்களை தேர்வு செய்வார்.
குட்டி ஸ்டோரி இது ஓர் குறும்பட போட்டி. கலையுலகில் கால் பதிக்கும் கனவுடன் இருப்பவர்களுக்கான களம். எவர் வேண்டுமானாலும் பதிவு செய்து
தங்கள் குறும் படங்களை அனுப்பி போட்டியில் பங்கு கொள்ளலாம். அவ்வாறு
பெறப்படும் படங்களை பார்வையிடும் பிரபல இயக்குனர்கள் வெற்றியாளர்களை தேர்வு
செய்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு ஏதேனும் ஒரு ஓ டி டி தளத்தில் வெப்சீரிஸ் (அ) படம் வெளியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். ஜித்து ஜில்லாடி நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்து கிடக்கின்றது. அப்படி உங்களுக்குள்
குடத்தினுள் விளக்காய் இருக்கும் திறமைகளை குன்றின் மேல் விளக்காய்
ஒளிரச்செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.எப்படி திறமைக்கு வயது வரம்பு கிடையாதோ அதுபோல் இந்நிகழ்ச்சிக்கும் வயது வரம்பு கிடையாது. எவரெல்லாம் இந்த வாய்ப்பை அழகுற கையாளுகின்றனரோ அவர்களின் தனித்திறமையை கலாபிளிக்ஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துசெல்லும்.இவை மட்டுமல்லாது பிரபலங்கள பங்கு பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் கலா மாஸ்டர் கலாபிளிக்ஸ் மூலமாக வழங்க உள்ளார்.