லோகேஷ் கனகராஜ் இயக்கம் ‘தளபதி 64’ படத்தின் முதல் பார்வை டிசம்பர் 31 வெளியீடு !

தளபதி விஜயின் 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பினை  பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,அர்ஜுன் தாஸ் , சாந்தனு, அழகன் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் .

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 64 படத்தின் முதல் பார்வை வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.