Cinematographer Ramji Press Rrelease and Stills
‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தையும், மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. இத்தகைய ஒரு அருமையான படைப்பை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த தங்களது பெரும் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு தருணத்திலும், எனது உழைப்பையும் நீங்கள் அங்கீகரித்திருப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.
மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரான பி சி ஸ்ரீராமிடம் உதவியாளராக எனது திரைத்துறை பயணத்தை துவங்கி, 1996ம் ஆண்டில் ‘வள்ளல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானேன்.
அதனை தொடர்ந்து, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் வணிகரீதியிலான திரைப்படங்கள், சிறப்பு திரைப்படங்கள் என அனைத்து தளங்களிலும் அயராது இயங்கி வருகிறேன். எனது ஒளிப்பதிவில் தமிழில் டும் டும் டும், மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களும், ஹிந்தியில் கியா கூல் ஹே ஹம், அப்னா சப்னா மணி மணி உள்ளிட்ட படங்களும், மலையாளத்தில் ஒரு யாத்ரா, மாணிக்கம், டான் பாஸ்கோ உள்ளிட்ட படங்களும் வெளியாகி மிகச் சிறந்த வரவேற்பையும், பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறது.
இவையனைத்தும், உங்களது முறையான, ஆத்மார்த்தமான சீரிய பங்களிப்பில்லாமல் சாத்தியமே இல்லை. ஆகையால், இந்த அருமையான, மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறேன்.
என்றும் உங்கள் அன்பை வேண்டும், ஆதரவை போற்றும்,- ராம்ஜி ஒளிப்பதிவாளர்.PRO.Nikil Murukan