சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

M.P.Anand – PRO

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் இன்று பிப்ரவரி 12ம் நாள் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சந்திரா மீடியா விஷன்ஸ் எஸ் எஸ் திருமுருகன் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா , ஸ்ருஷ்டி டாங்கேவை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி  வெங்கடேசனும் தற்போது இணைந்துள்ளார்.

சந்திரா மீடியா விஷன் முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் பட்டிபுலம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது, தற்போது இரண்டாவதாக தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே, யோகிபாபு, செந்தில் ஆகியோரைத் தொடர்ந்து  பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் இணைந்துள்ளார் இவரைத் தொடர்ந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு  எல். கே. விஜய், இசை சி.சத்யா, கலை இயக்கம் வீரசமர், படத்தொகுப்பு தியாகராஜன்.m, சண்டைப்பயிற்சி ஹரி தினேஷ்,  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆல்பர்ட் ராஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.