வறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்

இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.

லூமியெர்ஸ் ( lumieres ) ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில்  ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ” ராபின்ஹூட் “

இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாப்பாத்திரத்தில்  மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இக்பால் அஸ்மி   இசை  – ஸ்ரீநாத் விஜய்    பாடல்கள்  – கபிலன்   வசனம்  – ஜோதி அருணாச்சலம்   எடிட்டிங் – ஜோமின்    கலை – கே.எஸ்.வேணுகோபால்  நடனம்  – நந்தா  தயாரிப்பு மேற்பார்வை – சார்ல்ஸ்   மக்கள் தொடர்பு  – மணவை புவன்  தயாரிப்பு  ஜூட் மேய்னி, ஜனார்திக் சின்னராசா, ரமணா பாலா  கதை, திரைக்கதை , இயக்கம் –  கார்த்திக் பழனியப்பன். படம் பற்றி இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் கூறியதாவது..

“நாற்பது வருடங்களுக்கு முன்பு மச்சம்பட்டி என்ற  கிராமத்தில்  மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். நமக்கு மழை பெய்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்குகிறார்கள். இந்த ஊர் மக்களுக்கு ஒரே  நம்பிக்கை,ஆறுதல் எல்லாம் சுதந்திரப் போராட்டத் தியாகி  ராமசாமி  ஒருவரே.  இந்தச் சூழ்நிலையில் அந்தக்  கிராமத்தில் சின்னச் சின்ன திருட்டில் மொட்டை ராஜேந்திரன் குழு  ஈடுபடுகின்றனர். இந்த விஷயம் ஊர் மக்களுக்கு  தெரியவர , போலீஸில் புகார் கொடுக்கிறார்கள். புகார்  கொடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.  இந்த நேரத்தில் அரசு மூலம் நமக்கு  ஒரு நல்லது  நடக்கப் போவதாக நினைத்து  சந்தோஷப் படுகிறார்கள். அதற்கு தியாகி உயிருடன் இருந்தால் மட்டும் நடக்கும் என்ற  சூழ்நிலையில் திடீரென  தியாகி இறந்துவிடுகிறார். பிறகு மக்களுக்கு கிடைக்க இருந்த அரசின் பணத்தை ஊர் தலையாரி திட்டமிட்டு திருட நினைக்கிறார். இதை அறிந்த திருடன் மொட்டை ராஜேந்திரன் அவர்களின் சதி திட்டத்தை தடுத்து, அரசாங்க பணத்தை ஊர் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தாரா இல்லையா? என்பதை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம்.

இந்தப் படத்திற்காக மழை இல்லாமல் வறண்ட கிராமம் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள வல்லப்பன்பட்டி என்ற கிராமம் பல ஆண்டுகளாக மழையே வராமல் வறண்டுபோய் கிடந்தது. அங்கேயே  படப்பிடிப்பை நடத்தினோம்,

 ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுந்த போது வல்லப்பன்பட்டி மக்களே எதிர்பாராத ஒரு அதிசயம் நடந்தது. திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை  தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்தது. அதனால் ஊர்மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். எனக்கும் படக்குழுவினருக்கும் கனமழை கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததை நினைத்தது மகிழ்ச்சி அடைந்தோம் என்கிறார் இயக்குனர் கார்த்திக் பழனியப்பன்

.