Actor Mohan Fans Meet
சென்னையில் நடிகர் மோகன் – ரசிகர்கள் சந்திப்பு
1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார்.
வெகுகால அமைதிக்குப் பின், சென்னை மைலாப்பூர் வி ஏ தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு செய்தி வெளியான உடனேயே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் அவரை சந்திப்பதற்கு முன்பதிவு செய்து, மிகுந்த ஆவலுடன் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர், சுமார் 200 பேருக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர் ரமேஷ், குமாரசாமி, ஜெரால்டு, அம்மாப்பேட்டை கருணாகரன், கிருபானந்தம் ஆகியோரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்து, தங்களது வாழ்வில் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்காக நன்றியும் தெரிவித்தனர்.