போதையின் பாதையில் தமிழ் சினிமா: மீளுமா? ஷாக் தகவல்கள்

பாலிவுட்டில் நட்சத்திரங்கள் போதைக்கு அடிமையாவது சர்வ சாதரணமாக ஆகிவிட்ட நிலையில், கோலிவுட்டிலும் இப்போ மெல்ல மெல்ல அந்த கலாச்சாரம் பரவிடிச்சு. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் விமல்.

குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு சக நடிகர் ஒருவரை தாக்கியதாக விமல் மீது போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு ஆர்.டி நரைச் சேர்ந்தவர் அபிஷேக். கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘அவன் அவள் அது’ எனற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அபிஷேக் சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள தனியார் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்கி இருந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன், நள்ளிரவு தாண்டிய வேளையில் அப்பார்ட்மெண்ட் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்துள்ளார். அங்கு தனது நண்பர்கள் 4 பேருடன் விமல் வந்துள்ளார். அங்கிருந்த அபிஷேக்கிடம் விமல் அறை கேட்டுள்ளார்.

அப்போது அபிஷேக் ஏதோ சொல்லப்போக, போதையில் இருந்த விமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அபிஷேக்கை அடித்து உதைத்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அபிஷேக் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் 294(பி) ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவில் நடிகர் விமல் உள்பட 5 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விமல் படபிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்காக விமலை போலீசார் அழைத்துள்ளனர்.

ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விமல் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விமல் மட்டுமில்லாம, பல தமிழ் நடிகர் நடிகைகளும் இப்படி போதையின் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும், சமீபத்தில் பெரிய இடத்தை தன் உழைப்பால் பிடித்த நடிகர் மாலையானால் பாட்டிலுடன் செட்டில் ஆகி விடுவதாக கோலிவுட் வட்டாரங்கள் கவலையுடன் தெரிவிக்கின்றன.