தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் செய்திதுறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு

எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் செய்திதுறை அமைச்சராக பொறுப்பேற்ற வெள்ளக்கோவில் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களை 08.05.2021  அன்று  சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.
மேலும் நலவாரியம் தொடங்கி அரசின் சலுகைகள் அனைத்தும் எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் சங்கம் சார்பில் நடைபெற உள்ள விழாவிற்கும் அழைப்பு கொடுத்துள்ளோம்.
அமைச்சர் அவர்கள் பெரும் அன்போடும் உவகையோடும் வரவேற்று பேசியது பெரும் மகிழ்ச்சி..
நிர்வாகிகள் & உறுப்பினர்கள்,
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA)