சன்னி லியோன் தான் வேண்டும், அடம் பிடிக்கும் இளம் இசையமைப்பாளர்

உலகெங்கிலும் சன்னி லியோனுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அனைவரும் அறிந்த‌தே. அந்த சன்னி ஆர்மியில் புதுசா சேர்ந்திருப்பவர் மூத்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ்.

நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருக்கும் அம்ரீஷ், சன்னி லியோன் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் வீரமாதேவி படத்தில் அவரை பாட வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

“மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்சை பாடகராக்கினேன். கா படத்தில் ஆண்ட்ரியாவை ஒரு பாடல் பாட வைத்துள்ளேன். கர்ஜனை, பரமபத விளையாட்டு என திரிஷா நடிக்கும் 2 படங்களுக்கு இசையமைக்கிறேன். திரிஷாவை பாட வைக்க முயற்சி செய்தேன். அவரோ அதற்கான நம்பிக்கை இன்னும் தனக்கு வரவில்லை என்றார்,” என்று கூறினார்.

மேலும் அவர், “சன்னி லியோன் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் வீரமாதேவி படத்தில் அவரை பாட வைக்க திட்டமிட்டுள்ளேன். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் விருப்பம் இல்லை. இசையில் மட்டும்தான் எனது முழு கவனமும்,” என்று கூறினார்.

அம்ரேஷை அறிந்த வட்டாரங்கள், அவர் சன்னி லியோனின் ரசிகர் என்றும் சன்னியின் அழகு மட்டுமில்லாமல், குரலும் அவருக்கு மிகவும் பிடிக்கும், அதனால் தான் பாட வைக்க மெனக்கெடுகிறார் எங்கின்றனர்.

சமீபத்தில், அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகை சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பிஸியாக இருந்ததாலும், அவரது சம்பளத்தைக் கருத்தில் கொண்டும் அவரை படத்திலிருந்து நீக்கியுள்ளது படக்குழு.

தெலுங்கில் ஹிட் அடித்த திரைப்படம் டெம்பர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஷால் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதற்கு பாலிவுட் சன்னி லியோனியிடம் படக்குழு கேட்டுள்ளது. அவரின் கால்ஷீட் பிரச்னை மற்றும் சம்பளம் பிரச்னை காரணமாக ஷ்ர்தா கமிட் ஆகியுள்ளார். முன்னதாக, ஜெய் நடித்த வடகறி படத்துக்கு சன்னி லியோன் டான்ஸ் ஆடியது குறிப்பிடத்தக்கது.