முத்தம், முரண்பாடு, முரட்டுத்தனம்: தமன்னாவின் இன்னொரு முகம்

மில்க் பேபியா வலம் வரும் தமன்னா இந்த பூனையும் பால் குடிக்குமா ரகமா தெரிஞ்சாலும், உள்ளுக்குள்ளே பலே ஆளு தானாம். முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன், அது அஜித், விஜய்யா படமா இருந்தாலும் பரவாயில்லை என்று இத்தனை நால் முரண்டு பிடித்த தம்மு, இப்போ முரண்பாட்டின் மொத்த உருவமா மாறி இருக்கார்.

தமன்னா, “இதுவரை நான் யாருடனும் முத்த காட்சியில் நடிக்க ஒப்பு கொண்டதில்லை. ஆனால் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடன் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் நான் ரெடி”, என கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன்னா, ‘நான், திரைப்படங்களில் முத்தம் கொடுக்க மாட்டேன். எனது ஒப்பந்தத்திலும் அது குறித்து தெரிவித்து விடுவேன். ஆனால், ஹிரித்திக் ரோஷனுக்கு மட்டும் அந்த விதியிலிருந்து விலக்கு அளிப்பேன்’ என்று பளார் என்று சொல்லி சிரித்துள்ளார்.

மேலும் அவர், “நான் சமீபத்தில் ஹிரித்திக் ரோஷனை நேரில் பார்த்தேன். அப்போது, செய்வதறியாமல் அவரிடம் சென்று, ‘நான் உங்களின் மிகப் பெரிய ரசிகை’ என்றேன். அவர் அதை ஆமோதித்துவிட்டு சென்றார்.

சிறிது தூரம் சென்ற அவர், ‘உங்களுக்கு ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா?’ என்றார். நானும், ‘ஆமாம்’ என்றேன்,” என ஹிரித்திக் உடனான சந்திப்பை மகிழ்ச்சித் ததும்ப விளக்கினார்.

இந்நிலையில், விஷாலுடன் இணைந்து கத்திச் சண்டை படத்தில் நடித்த அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் விஷாலுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதில் வில்லத்தனமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சவாலான கதாபாத்திரத்தில் அதில் நடிக்க உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வலுப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.

தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான எப் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அவர் ஓம்கர் இயக்கத்தில் ராஜு கரி காதி 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.