இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படம், கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது.
2018-ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க,… Continue reading "இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படம், கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது."