STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – சிம்புவின் “சிலம்பாட்டம்” பிப்ரவரி 6 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது!

சிலம்பாட்டம் திரைப்படம் விரைவில் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன்–மாஸ் படம், சிம்புவின் கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து இரட்டை வேடங்களில் சிம்பு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய இப்படம் விரைவில் மீண்டும் திரைக்குவருகிறது.

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தாயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர் ஆதரவும் பெற்ற “சிலம்பாட்டம்”, காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி–படத் தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் “வேட்டையன்” மற்றும் “தாமரை” என்ற இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்தது ரசிகர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில், சிலம்பக் கலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆக்‌ஷன் காட்சிகள், சிம்புவின் உடல் மொழி, டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனி அடையாளம் கொடுத்தன.

இயக்குநர் S சரவணன் இயக்கத்தில் உருவான “சிலம்பாட்டம்” படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிய பலமாக அமைந்தது. “சிலம்பாட்டம்” டைட்டில் பாடல் முதல் மெலடி, குத்து பாடல்கள் வரை அனைத்தும் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. சிம்புவுடன் இணைந்து சனுஷா, ஸ்நேகா ஆகியோர் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரங்கள், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

மாஸ் சிம்பு, ஆக்‌ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு—அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, “சிலம்பாட்டம்” ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும். இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி மீண்டும்
திரைக்கு வருகிறது.

Exit mobile version