DMK's twist Stalin invites ideas from public for party's manifesto

ஸ்டாலினின் சைலன்ட் பர்த்டே: காரணம் இது தானா?

என்னதான் தந்தையின் மறைவு, பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கியுள்ளதால் மாணவர்களுக்கு தொந்திரவுக் கூடாது என காரணங்கள் கூறப்பட்டாலும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று தன் பிறந்தநாள் அதுவுமே இப்படி யாரையுமே சந்திக்காமல் சைலன்ட் மோடுக்கு போவார் என உபிக்கள் எதிர்ப்பார்க்கலையாம்.

தன் அனைத்து ராஜதந்திரங்களும் பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணிக்கு கொன்டு வருவதிலே தோற்றுப் போனதால் தான் ஸ்டாலின் இப்படி அப்ச்ட்டாகி ஆஃப் ஆகிட்டாருன்னு சில பேர் சொல்றாங்க.

இன்னும் சில பேரோ, தேர்தல் காரணமாக இன்னும் சில மாதங்கள் குடும்பத்தினரோட செலவழிக்க முடியாது. அதனால, நேத்து பூரா மனைவி, மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகளோட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிற ஒரு பண்ணை வீட்டுல செலவழிச்சாருன்னு சொல்றாங்க.

ஆனால், ஸ்டாலின் தன் பிறந்தநாளன்னைக்கு சைலன்ட் மோடுக்கு போனாலும், திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டர் மூலம் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு நேற்று 66வது வயது பிறந்தது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை திமுகவினர் இளைஞர் எழுச்சி நாளாக உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். நாடு முழுவதுமிருந்து திமுகவினர் சென்னையில் பெருமளவில் திரண்டு வாழ்த்து தெரிவிப்பார்கள். அவர்களின் வாழ்த்துக்களை ஸ்டாலின் ஏற்றுக் கொள்வார்.

ஆனால், இந்த ஆண்டு ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். திமுக தலைவர் கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவு பெறாததும், பிளஸ் டூ தேர்வுகளும் இதற்கு காரணமாகக் கூறப்பட்டது.

40 தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளைப் பறித்து தருவதே ஒப்பற்ற விலை மதிப்பில்லாத பிறந்த நாள் பரிசாக அமையும் என்று ஸ்டாலின் தனது தொண்டா்களுக்கு தொிவித்தார்.

“தொண்டர்களின் பேரன்பு மிகுந்த ஆதரவுடன் திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது. எப்போதும் என் பிறந்தநாள் என்பது நம் உள்ளம் நிறைந்த – உயிரில் கலந்த – உணர்வெல்லாம் நிரம்பி நம்மை எப்போதும் இயக்கிக்கொண்டே இருக்கும் தலைவர் கருணாநிதியின் வாழ்த்துகளுடன் தான் தொடங்கும்.

கோபாலபுரம் இல்லத்தில் தந்தையின் முன் தனயனாக, தலைவரின் முன் பணிவு நிறைந்த தொண்டனாக நின்றிடுவேன். என்னை ஈன்றெடுத்த தயாளு அம்மையார் அருகிலிருக்க, என் வாழ்க்கைத்துணையும் பிள்ளைகளும் சூழ்ந்திருக்க, உறவுகள், உடன்பிறப்புகள் குழுமியிருக்க தலைவர் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை உச்சி மோந்து முத்தமிட்டு உவகை பொங்க வழங்குவார். அந்த அன்பும் அரவணைப்பும் கலந்த வாழ்த்து தரும் தெம்பு என்பது அடுத்து வரும் மார்ச் 1 ஆம் தேதி வரை நீடிக்கும்.

இயற்கையின் சதியால் இப்போது தலைவர் நம்மிடையே இல்லை. அவரிடம் நேரில் சென்று வாழ்த்துப் பெறுகின்ற வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. என் பிறந்தநாளில் தலைவர் எனும் உதயசூரியனின் தகத்தகாய ஒளிர்முகம் காண முடியாத நிலையில் இருக்கிறேன். அப்பா என்று வாய்நிரம்ப அழைக்க முடியாத மகனாக, தலைவரே என்று உணர்வை வெளிப்படுத்த இயலாத தொண்டனாக இந்த ஆண்டு எனக்கு அமைந்துவிட்டது,” என்று கூறினார்.