ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

கோடை வெப்பம் தொடங்கியதை  முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும்  பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. 
மேலும் கடந்த வருடமே இனி  வருடம் தோறும் கோடை வெப்பத்தின்  தாக்கத்தில்லிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு அவர்களுக்கு  மூலிகை நீர்மோர் வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்லமைச்சர் அவர்களின் உத்திரவின்பேரில்  மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்  அறிவுறுத்தி இருந்தார் அதன்படி இந்த ஆண்டு  இன்று 21.02.2023 செவ்வாய் கிழமை   காலை 11.00 முதல்  துரை பிரகாரத்தில்  கட்டணம் மில்லா வரிசையிலும், கொடி மரம் அருகில் கட்டண தரிசன வரிசையிலும்   ஆக சுமார் 5000  பக்தர்களுக்கு மருத்துவ  குணம் நிறைந்த மூலிகை நீர்மோர்  (இஞ்சி, கறிவேப்பில்லை , கொத்தமல்லி , பச்சைமிளகாய் ,பெருங்காயம் , உப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது .   கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இணை ஆணையர் திரு செ.மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார் உடன்  கண்காணிப்பாளர் திரு மு.கோபலகிருஷ்ணன் , உதவி மேலாளர் திருமதி தி.சண்முகவடிவு அர்ச்சகர் சுந்தர்பட்டர்.
கோடை காலம் முழுவதும் உபயமாக மூலிகை நீர் மோர் வழங்க   திருச்சி வேதா பால் நிறுவனர் திரு ரமேஷ்   முன் வந்துள்ளார் .
T RAGHAVAN

Share this:

Exit mobile version