SRIRANGAM ARULMIGU SRI RANGANATHAR SWAMI THIRUKOIL

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் :

திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சுமார் 40 வருடங்கள் இருந்ததை முன்னிட்டு ஆடி முதல் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெறும் போது ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை ஏழுமலையானுக்கும் , தாயார்க்கும் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம்.
அதை முன்னிட்டு இன்று  15.07.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்ரீரெங்க விலாசமண்டபத்தில் பக்தர்கள் மற்றும் ஊடக பத்திரிக்கையாளர்கள் / தொலைகாட்சியினர்க்கு  “வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை” காட்சி படுத்தப்பட்டது , நாளை கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து தலமையில் திருக்கோயில் பணியாளர்கள் திருப்பதி புறப்பட்டு 17.07.2022 ஞாயிற்றுக்கிழமை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர் .இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இணை ஆணையர் திரு சீ. செல்வராஜ் , உதவி ஆணையர்கள் ஆர் .ஹரிஹரசுப்பிரமணியன் ,ப.அரவிந்தன் , மேலாளர் கு.தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .
T RAGHAVAN

Share this:

Exit mobile version