ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ படத்தில் ஒற்றைக் காட்சி தான் – டைரக்டர் ஹாசிம் மரிக்கார்.

கேரளாவில் ‘மரிக்கார் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் மிகவும் பிரசத்தி பெற்றது.இதுவரை மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், போன்ற பிரபல நாயகர்கள் நடிப்பில் 16 படங்கள் தயாரித்திருக்கிறார்கள். இந்த மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். அந்த அனுபவங்களைப் பற்றி ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :-

நீண்ட வருடங்களாகவே தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனென்றால், தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் பரப்பான விளம்பரம் இருக்கிறது. மலையாளத்தில் கதை கரு நன்றாக வந்தாலும் உலகம் முழுவதும் எல்லோரிடமும் சென்று சேரும் விதமாக சினிமாவிற்கான மிகப்பெரிய சந்தை தமிழ் சினிமாவில் தான் உள்ளது. அதனால் தான் தமிழில் டைரக்ட் செய்ய விரும்பினேன்.

‘உன் காதல் இருந்தால்’ என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எதிர்மறை பாத்திரங்களை இயக்குவது இதுவே முதல் முறை. ஒவ்வொரு 15 நிமிடங்களும் ஒவ்வொரு விதமாக நகரும். சாதாரணமாக பார்க்கும் போது இந்த விஷயங்களை கவனிக்க முடியாது.

படத்தின் கதை கரு மூன்று நிறத்தில் முற்றிலும் வேறு மாதிரியானதாக இருக்கும். இந்த கதையை இழுக்க வித்தயாசமாக .. புது விதமாக திரையில் படம்பிடித்து வைத்திருக்கிறேன். இப்படம் உளவியல் திரில்லர். பார்வையாளர்களுக்கும் படத்திற்கும் உளவியல் இருக்கும். திரில்லர் படத்தில் இருக்கும். அதேபோல், ஹாரர், நகைச்சுவை, குடும்ப உறவுகள், காதல் என்று பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். படத்தின் நேரம் 2 மணி நேரம் தான். படம் பார்க்கும் மக்கள் படத்துடன் அவர்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் படியாக.. இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும் வண்ணம் இருக்கும். மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான். அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம் தான் முழு படம். அது தான் இந்த படத்தின் சிறப்பு.

ஸ்ரீகாந்த் சிறந்த நடிகர். ஆனால், அவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 40 திரைப்படங்கள் நடித்திருந்தாலும் முதன்முதலாக தமிழ் ரசிகர்கள் புது ஸ்ரீகாந்தை இந்தப்படத்தில் பார்ப்பார்கள். அதேபோல், அவர் நடிப்பை பெரிதும் ரசிப்பார்கள். எளிமையாக, யதார்த்தமாக அவருடைய நடிப்பு இருக்கும். மேலும், ஸ்ரீகாந்தின் முகம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயம். அவருடைய சுவரொட்டியைப் பலரும் பார்ப்பார்கள். குறிப்பாக, பெண்கள் தான் அதிகம் பார்ப்பார்கள்.

ஷங்கர், ஃபாசில் போன்ற பெரிய இயக்குனர்களுடன் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் என் படத்தில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருடன் 3 நாயகிகளும் நடிக்கிறார்கள். சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் நடிக்கிறார்கள். ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தொழிநுட்பம் :-
தயாரிப்பு & கதை, இயக்கம் – ஹாசிம் மரிக்கார் ஒளிப்பதிவு – சாஜித் மேனன் படத்தொகுப்பு – சாய் சுரேஷ் இசை – மன்சூர் அஹமத்
கலை – ஆர்கன் எஸ். கர்மா உடைகள் – அரவிந்த் பாடகர்கள் – ஆண்டனி தாசன், கார்த்திக், மானஸி அலங்காரம் – பிரதீப் ரங்கன்
பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் – பிரபாகரன் அமுதன், கண்மணி சண்டை பயிற்சி – ரன் ரவி புகைப்படம் – வித்யாசாகர்
தயாரிப்பு மேற்பார்வை – சுனில் பேட்டா மக்கள் தொடர்பு – ஜான்சன் தயாரிப்பு நிறுவனம் – மரிக்கார் ஆர்ட்ஸ் விஎஃப்எக்ஸ் (VFX) – டிஜிட்டல் கார்வி இப்படத்தை தீபாவளிக்குப் பிறகு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘உன் காதல் இருந்தால்’ படம் விரைவில் வெளிவரும்.