ஸ்ரீ ரெட்டியின் லேட்டஸ்ட் செக்ஸ் குற்றச்சாட்டு: அதிர்ச்சியில் திரையுலகம்

யார் ஓய்ந்தாலும் ஸ்ரீ ரெட்டி ஓயமாட்டார் போல. அடுக்கடுக்கான பாலியல் புகார்களை கூறி பல கோலிவுட், டோலிவுட் பிரபலங்களை தெறிக்க விட்ட ஸ்ரீ ரெட்டி தற்போது புதிதாக ஒரு புயலை கிளப்பி அதிர்ச்சி அலைகளை பரவவிட்டுள்ளார்.

இவர் தனது படுக்கையறையில், இடுப்பு தெரிவது போன்ற வீடியோ வெளியிட்டு, இந்த வீடீயோவை தெலுங்கு நடிகர் நானிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் தங்களது வெறுப்பை காட்டி வருகின்றனர்.

“நானி சினிமா வாய்ப்புக்காக போராடியபோது என்னுடன் நட்பானார். புகை, மது, போதை பழக்கங்கள் அவருக்கு இருந்தன. அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி என்னை தவறாக பயன்படுத்தி ஏமாற்றினார். ஒரு நாள் மது பாட்டிலுடன் வீட்டுக்கு வந்து என்னையும் குடிக்க தூண்டினார்”, என்றும் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை நானியின் மனைவி அஞ்சனா மறுத்ததுடன் ஸ்ரீரெட்டிக்கு கண்டனமும் தெரிவித்தார். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாக தயாராகிறது.

இந்த படத்தில் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர்களை வெளிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது லேட்டஸ்ட் பதிவு தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நானியும் அதிர்ச்சியாகி உள்ளார்.

ஸ்ரீரெட்டி, கடந்த ஆண்டு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் தனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக கூறி, பயன்படுத்திகொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகர் சங்கம், மற்றும் பிலிம் சேம்பர் வரை சென்று புகார் கொடுத்தார்.

பின்னர் இவரின் பார்வை, தமிழ் திரையுலகின் பக்கம் திரும்பியது. தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

நானி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீரெட்டி பங்குபெறுவதாக இருந்தது. ஆனால் அவர் பங்கேற்றால் நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என நானி கூறியதால் அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியாமல் போயிற்று.