தென்னிந்திய நடிகர் சங்க பத்திரிகை செய்தி
இந்திய அரசின் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு இன்று பன்மொழி சார்ந்த ஒட்டுமொத்த திரையுலகமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது. விருது பெற்ற ஒவ்வொரு திறமைக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் திரைத்துறையை சார்ந்த நடிகர் எம். எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பார்க்கிங் படத்துக்காக, திரு.ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாத்தி படத்துக்காக, நடிகை திருமதி. ஊர்வசி சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது உள்ளொழுக்கு – மலையாள படத்திற்க்காவும், வென்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஊர்வசி அவர்களும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களும் நடிப்பின் இலக்கணமாகவே மாறி விட்டனர். நடிகை ஊர்வசி மற்றும் திரு.ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது தேசிய விருது. தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள மூவருமே தமிழ் திரையுலகில் தனி இடம் பெற்றவர்கள்.
இவர்களுக்கும், தமிழ் திரைத்துறைக்கு இந்த ஆண்டு 3 தேசிய விருதுகளை பெற்றுத் தந்த பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவுக்கும், இந்த விருதுகளை கொண்டு சேர்த்த அனைவருக்கும் உள்ளார்ந்து வாழ்த்துகிறது.
குறிப்பாக நடிப்பிற்காக விருது பெற்ற அனைவருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
# தென்னிந்திய நடிகர் சங்கம்
