சலூன்’ பின்னணியில் கடையின் முதலாளியாக சிவா, தொழிலாளியாக யோகி பாபு நடிக்கின்றனர்.

ரெதான் – தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் “சலூன்”
‘குற்றம் 23’, ‘தடம்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. எஸ் ஆர்  பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்மபிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார் இந்தர்குமார்.
‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
முழுக்க முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.
படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு – இந்தர்குமார்  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன்
ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன்  இசை – சாம்.சி.எஸ்  எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – சி.எஸ்.பாலசந்தர்  பாடல்கள் – யுகபாரதி  மக்கள் தொடர்பு – நிகில் முருகன்