சைலன்ட் விஜய், ‘ரவுடி பேபி’ சாய் பல்லவி: கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது எப்படி?

இயக்குனர் விஜய்க்கும் சாய் பல்லவிக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் முழுக்க கிசுகிசுக்கப் படும் நிலையில், விஜய் இந்த தகவலை மறுத்துள்ளார்.

அமலா பாலுடன் தனக்கு நடந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த விஜய், தியா படத்தில் சாய் பல்லவியை இயக்க்கினார். மிகவும் அமைதியான அவரது சுபாவம் கலகலப்பான சாய் பல்லவியை மிகவும் கவர்ந்ததாகவும், இதைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய்யும், சாய் பல்லவியும் தங்கள் பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தகவல்கள் றெக்கை கட்டி பறந்த நிலையில், விஜய் இதை மறுத்துள்ளார்.

சாய் பல்லவியுடன் காதல் என்பதில் உண்மை இல்லை. அவரும், நானும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று விஜய் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை பற்றி இது போன்ற வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்பது தெரியாமல் எரிச்சல் அடைந்துள்ளார்.

இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள விஜய் தரப்பு, இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும் கூறியுள்ளது.

விரைவில் ரிலீசாக இருக்கும் வாட்ச்மேன், தேவி 2 பட பத்திரிகையாளர் சந்திப்பில் தனது திருமணம் குறித்த தகவலுக்கு இயக்குநர் விஜய் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடிகை அமலாபாலுடன் இவருக்கு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்தனர்.

இதையடுத்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்.