இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் துவங்கி வைத்த சித்தா மருத்துவமனை
சென்னை அண்ணா நகர்(மே )விரிவாக்கம், வெல்கம் காலனி 5ஆவது தெருவில் உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஸ்ரீ லதாமாரி ஹெல்த் கேருக்கு முன்னாள் இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் வருகை புரிந்து கிளினிக்கை திறந்து வைத்தார்.
துவங்கி வைத்து பேசிய நம்பி நாராயணன்,
நம் இந்திய குழந்தைகள், வாலிப வயதில் வெளி நாட்டில் வேலையை எவ்வளவு ஈடுபாட்டோடு உழைக்கிறார்களோ அதே போல் இங்கும் நம் நாட்டிலும் அதே வேகத்தில் உழைக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் என்றார்.
கேரளாவில் உள்ளது போன்று சென்னை அண்ணாநகரிலும் இயன்முறை மருத்துவத்தோடு,நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமான வருமம் மற்றும் சித்த மருத்துவத்தையும் சேர்த்து ஆரம்பித்துள்ளது வரவேற்கதக்கது.
நம் பாரம்பரிய மேற்கண்ட மருத்துவங்களால் எந்த வித சைடு எபெக்ட் இல்லாமல் நமது ஆயுளை அதிகரிக்க செய்யும் என்பதை,கூறி கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.